தஞ்சாவூர், ஜூலை 6: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் நடத்திய சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் பறிமுதல் செய்யது ஒரு லட்சம் அபராதம் விதித்த அதிகாரிகள். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி உத்தரவின் படி தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மாதாகோட்டை மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் இயங்கி வரும் இரண்டு சில்லறை விற்பனை நிலையங்களில் சோதனை செய்யப்பட்டது.
அந்த சோதனையில் கடையில் வைத்திருந்த சுமார் 38.750 கிலோ அளவிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கும் தல ரூ.50,000 விதம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கடைகளுக்கு உணவு வணிகம் 30 நாட்களுக்கு மேற்கொள்ள தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் விஜயலலிதா அம்பிகை மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் கொண்ட குழுவினர் இருந்தனர்.
