விவசாயிகள் குறை தீர் கூட்டம் முதல் வாரத்தில் நடத்த கோரிக்கை

 

வேதாரண்யம் ஜூலை 2: கடைமடை விவசாய சங்க மாநில தலைவர் கமல்ராம் விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்திருப்பதாவது, வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுவதற்கு முன்பாகவே நடைபெற வேண்டும். அப்போதுதான் வட்ட, தாலுகா, கோட்ட அளவிலான கோரிக்கைகள் கலெக்டர் தலைமையிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்த முடியும் மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்ற பிறகு கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது ஏற்புடையதாக இல்லை. ஆகையால் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் குறைதீர் கூட்டம் நடத்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: