சினிமா உலகில் இருந்து விடுபடுங்கள் சினிமா கற்பனையில் கல்லூரிக்கு வந்தால் கடும் நடவடிக்கை

 

வேதாரண்யம், ஜூலை 2: சினிமா உலகில் இருந்து விடுபடுங்கள். சினிமா கற்பனையில் கல்லூரியில் வரக்கூடாது. அப்படி வந்தால் கல்லூரி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று, வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழாவில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாணவர்களை தற்கால தோழனாக செல்போன் மாற்றி உள்ளது. நீங்கள் தாய் தந்தையாகும் போது தான் உங்கள் பெற்றோர்களின் வலி உங்களுக்கு புரியும். உங்கள் தாய் தந்தையரிடம் நீங்கள் நல்லது கெட்டதை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வயதில் காதல் வரும் இது இயற்கையான ஒன்றுதான். இந்த பிரச்சனையை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுவதை விட தாய் தந்தையரிடம் பகிர்ந்து கொண்டால், உங்களுக்கு நல்ல, கெட்டது என்பதை எடுத்துக் கூறுவார்கள்.

தாய் தந்தையர்கள் செய்யும் தொழிலை அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவனும் விவசாயத்தை அறிந்திருப்பது மிக மிக அவசியம். வாழ்க்கையில் மற்றவரோடு புன்னகையோடு பேசுங்கள். அது தான் நீங்கள் படித்ததின் வெளிபாடு. ஆசிரியர்கள் உங்கள் எதிரிகள் அல்ல. உங்களின் வாழ்க்கையின் வழிகாட்டி. ஆசிரியர்களோடு நன்றாக பழகுங்கள். சினிமா உலகில் இருந்து விடுபடுங்கள். சினிமா கற்பனையில் கல்லூரியில் வரக்கூடாது. அப்படி வந்தால் கல்லூரி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும். ஒழுக்கமான உடை கட்டுப்பாட்டுடன் கல்லூரியில் நடந்து கொள்ள வேண்டும். சக மாணவிகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நண்பர்களாக பழக வேண்டும். பெண்களை கிண்டல் செய்யக்கூடாது. அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது உள்ள சட்டப்படி பெண்களை கிண்டல் செய்தால், அவர்கள் புகார் கொடுத்தால், உங்கள் வாழ்க்கை முடிந்து விடும். விவசாயத்தை பேணிப் பாதுகாக்கவேண்டும். பழைய முறைப்படி மண்பானையில் சமைத்து பழையதை சாப்பிடுங்கள். உடம்புக்கு நல்லது. நல்ல உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடம்பை பாதுகாப்பது மிக அவசியம். அதனோடு கல்வியிலும் அதிக கவனம் செலுத்துங்கள். கல்வி மட்டும் தான் நம் வாழ்க்கையில் உயரச் செய்யும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பேராசிரியர் பிரபாகரன் வரவேற்றார். பேராசிரியர்கள் மாதவன், சுந்தரம், விஜயலட்சுமி, மாரிமுத்து, கார்த்திகா, செந்தில்குமார், அலுவலக கண்காணிப்பாளர்கள் திருச்செல்வம், சந்திரபோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினர். பேராசிரியர் ராஜா நன்றி கூறினார்.

Related Stories: