முன்னாள் முதல்வர் கலைஞரால் கட்டப்பட்டது: சிதலமடைந்து வரும் வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் தோரணவாயில்

 

சீர்காழி, ஜூலை 1: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வரலாற்று சிறப்புமிக்க பண்டைய காலத்தில் சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கிய பூம்புகார். இதற்கு காவேரி பூம்பட்டினம் என்ற பெயரும் உண்டு. குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி பூம்புகாரில் வந்து சங்கமிக்கின்றது. பூம்புகார் மிகப்பெரிய வர்த்தக துறைமுகமாக இருந்து வந்துள்ளது. காவிரிப்பம்பட்டினம் கடந்த 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கி இருப்பதாக ஒரு ஆய்வின் அறிக்கை தெரிவித்துள்ளது. பூம்புகாரின் பெருமை மணிமேகலை சிலப்பதிகாரம் பட்டின பாலை போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளன.

கடலுக்குள் மூழ்கிய பூம்புகாரை கண்முன் நிறுத்தும் வகையில் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் 1973ம் ஆண்டு சிலப்பதிகார கலைக்கூடம், கிளிஞ்சல் வீடுகள், நத்தை வீடுகள், இலஞ்சி மன்றம், வெளியிடை மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பாவை மன்றம், பூத சதுக்கம், சிலப்பதிகார கலைக்கூட வாயில், மாதவி தோரண வாயில், கண்ணகி தோரண வாயில் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த தோரண வாயில்கள் முறையாக பராமரிக்கப்படாததால் சிதலமடைந்து வருகின்றன. மேலும் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றது. சில தோரண வாயில்கள் சிதைந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுந்து வருகின்றன.

குறிப்பாக மாதவி தோரணவாயில் சிதைந்து சிமெண்ட் காரைகள் கீழே விழுந்து வருகின்றது. இதனை கண்டு அப்பகுதி பொதுமக்கள் வேதனை அடைந்து வருகின்றனர். மேலும் அந்த வழியாக சாலை கடக்கும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் நலன் கருதி சிதிலம் அடைந்த தோரண வாயில்களை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: