பெண்ணுக்கு பாலியல் தொல்லை காங்கிரஸ் கவுன்சிலர் கைது

ஆலங்குளம்: தென்காசி மாவட் டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரை சேர்ந்தவர் அரிநாராயணன் (55). வழக்கறிஞரான இவர், பாப்பாக்குடி வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவராகவும், இதே ஊரில் இயங்கி வரும் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகியாகவும், ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். ஆலங்குளம்- அம்பை சாலையில் அரசு உதவிபெறும் சொசைட்டி ஒன்றையும் அரிநாராயணன் நிர்வகித்து வருகிறார்.

இந்த சொசைட்டியில் வேலை செய்த இளம்பெண்ணுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளம்பெண், பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைதொடர்ந்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிந்து அரிநாராயணனை கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: