×

11வது நாளாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம்: உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடல்நிலை பாதிப்பு

புதுடெல்லி: டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது.  நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு உட்பட தேர்வு முறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20ம் தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் கடந்த ஞாயிறு முதல் உண்ணாவிரதப்போராட்டமும் தொடங்கப்பட்டது.

சிஜேபியின் போராட்டம் நேற்றுடன் 11வது நாளை எட்டியது. போராட்ட இடத்திற்கு ஆதரவாளர்கள் வருவதை தடுப்பதற்கு கடுமையான போலீஸ் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த சிஜேபி தலைவர் அபிஜித் டிப்கே குற்றம்சாட்டியுருக்கிறார். போராட்ட இடத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அபிஜித் டிப்கே, ‘‘போராட்ட இடத்திற்குள் மக்கள் நுழைவதை காவல்துறை தடுக்கின்றனர், கட்சியின் முக்கிய குழு உறுப்பினர்கள் பலருக்கும் அனுமதி மறுக்கப்படுகின்றது. ஆதரவாளர்கள் ஜந்தர்மந்தரை வந்தடைவதை தடுப்பதற்காக போக்குவரத்து முடக்கப்படுகிறது. அவர்கள் என்ன செய்ய திட்டமிட்டுள்ளனர்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Karapanpoochchi Janata Party ,New Delhi ,Delhi ,
× RELATED மழை பெய்யும் வரை காத்திருங்கள்...