×

பொது இடங்களில் மாடுகள் வெட்ட தடை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்

புதுடெல்லி: பொது இடங்களில் மாடுகள் வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி பொதுச்செயலர் சூர்யபிரசாந்த் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்து இருந்தார். இதையடுத்து அதனை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு, ” பக்ரீத் பண்டிகையின் போதோ அல்லது எந்தவொரு நாளிலோ அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மாடு, கன்று பலியிடக் கூடாது.

அதற்கு தடை விதிக்கப்படுகிறது என கடந்த மாதம் 27ம் தேதி தீர்ப்பளித்து இருந்தனர். மேலும் இந்த உத்தரவானது பக்ரீத் பண்டிகையின் போது பிறப்பிக்கப்பட்டதால் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கானது விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Tamil Nadu government ,High Court ,Supreme Court ,New Delhi ,Suryaprashanth ,Hindu Makkal Katchi ,Coimbatore ,Madurai ,Justices ,G.R. Swaminathan ,
× RELATED மழை பெய்யும் வரை காத்திருங்கள்...