சம்பால்: உத்தரப்பிரதேசத்தின் சம்பால்-மொராதாபாத் சாலையில் அமைந்துள்ள தக்த்குஷைன் கிராமத்தில் உள்ள சுமார் 2.367ஹெக்டேர் கிராம சபை நிலத்தை மோசடியாக ஒதுக்கீட செய்து, நிலப்பதிவேடு மாற்றம் மற்றும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.100கோடி ஆகும். இந்த நில மோசடி தொடர்பாக கொத்வாலி காவல்நிலையத்தில் அதிகாரிகள் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் அடையாளம் தெரிந்த 31 பேர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
