×

ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் மும்பை மருத்துவமனையில் அனுமதி

திருமலை: ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன்கல்யாண் சில காலமாக இருதோள்களிலும் தோள்பட்டை தசைநார் மற்றும் தசை காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். எனவே அவரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இல்லையென்றால் தோள்பட்டை தசைகள் கிழிந்தால் நிலைமை மேலும் சிக்கலாகும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் பவன் கல்யாண் மனைவி அண்ணா கொனிடேலாவுடன் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு அனுமதிக்கப்பட்டு இரு தோள்பட்டைகளையும் முழுமையாக பரிசோதித்த பிறகு, தோள்பட்டை தசைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். எனவே உடனடியாக அறுவை சிகிச்சை தேவை என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

Tags : Andhra ,Pradesh ,Deputy Chief Minister ,Pawan Kalyan ,Mumbai ,Tirumala ,Jana Sena Party ,
× RELATED மழை பெய்யும் வரை காத்திருங்கள்...