சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.621 கோடி மோசடி நடந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.300 கோடி மோசடி என ஏற்கனவே புகார்கள் குவிந்து வந்தன. மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மோசடி வழக்கு தொடர்பாக 71 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 5,752 முதலீட்டாளர்களிடம் ரூ. 621 கோடி வரை மோசடி நடந்துள்ளது என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.
