சென்னை: நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் தரப்படும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தக் கூடாது என்று அனிதா கூறியுள்ளார். தூத்துக்குடி, நெல்லை, குமரியில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு மீனவர்கள் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டுப்படகு மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை அதிகப்படுத்த வேண்டும். மீனவர்களுக்கு ரூ.25க்கு தரப்படும் மண்ணெண்ணெய் விலை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகின்றன என்று அனிதா குறிப்பிட்டுள்ளார்.
