3 ஆண்டுக்கு ஒரு முறை 15% சதவீதம் வாடகை உயர்வு; முன்பிருந்த நிலையே தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும்: சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு கோயில் சார்ந்து, சாராத மனையில் குடியிருப்போர் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் வி.ஏ. பாலசுப்பிரமணியன் அறநிலையத்துறை ஆய்வு கூட்டத்தில் வெளியிட்ட கருத்துகளை விளக்கி கூறியது:
கோயில் மனைகளில் கடைகள் வைத்திருப்போர் 250 கோடி அளவில் பாக்கி வைத்திருப்பதாக கூறியிருக்கிறீர்கள். கோயிலுக்கு வருமானம் வரவேண்டும். எனவே பாக்கியை வசூலிக்கவேண்டும் என்ற தங்களின் கருத்து ஏற்புடையதே, வரவேற்கிறோம். அதே நேரத்தில் இவ்வளவு பாக்கி எப்படி வந்தது என்பதற்குண்டான உண்மையான காரணத்தை அதிகாரிகள் தங்களுக்கு எடுத்து சொல்லவில்லை என தெரிகிறது.

தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போரும், கடைகள் வைத்திருப்போர் வாழ்வாதாரத்திற்காக போராடியதின் விளைவு 2007ம் ஆண்டு அப்போதைய அரசால் வெளியிடப்பட்ட அரசாணை 456ன்படி 50/60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இடங்களில் வாழ்ந்து வரும் இவர்களுக்கு நீண்டகால பயன்பாட்டினை கருத்தில் கொண்டு 2001ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பில் 0.1% குடியிருப்போருக்கும், 0.3% வணிக நிறுவனங்களுக்கும் வாடகை நிர்ணயிக்கப்பட்டு, 3 ஆண்டுக்கு ஒரு முறை 15% சதவீதம் உயர்த்தி வாடகை வசூலிக்க அரசாணை வெளியிடப்பட்டு 2012 வரை இந்தமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

குழப்பங்களுக்கெல்லாம் முடிவு கட்டும்விதமாக 2016க்கு முன்பிருந்த நிலையே தொடர (ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15% சதவீதம் உயர்த்தி வாடகை வசூலிக்கும் அரசாணை 456 தொடர) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வேண்டுகோள். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: