சென்னை: ஆவின் நிறுவனம் தனது பால் விற்பனையில் சுமார் 7% குறைத்ததாலும், கிரீன் மேஜிக் பால் வகையில் மட்டும் 30% குறைத்ததாலும் மக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு நேரடியாக தலையிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் தேவையை ஆவின் பூர்த்தி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூ. மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
