காஞ்சிபுரம்: குடிபோதையில் தாக்க முயன்ற மகனை குடிபோதையில் கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மகன் ரூபேஷ் (22) கத்திரிக்கோலால் குத்த முயல, அதே கத்திரிக்கோலால் தந்தை ஏழுமலை (50) தாக்கவே சம்பவ இடத்திலேயே மகன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
