குறுவை சாகுபடி பொய்த்து போனதால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாய சங்கம் வலியுறுத்தல்

 

தஞ்சாவூர், ஜூன் 30: அறுவடை செய்துள்ள நெல்மணிகள் மழையில் நனைந்ததால் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க கோரி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு வழங்கினார். அந்த மனுவில் கூறியதாவது: 2026 இல் 6.31 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு பொய்த்துவிட்டது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக முதல்வர் ஏக்கருக்கு ரூபாய் 40,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அறுவடை செய்துள்ள நெல்மணிகள் குவியல் குவியலாக கொட்டி வைக்கப்பட்டு மழையில் நனைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டி கிடைக்கின்ற நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் முழு பயிர் கடன் தள்ளுபடி என கூறிவிட்டு ரூபாய் 75,000 ரூபாய் 35 ஆயிரம் பயிர்களின் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பும், மேற்படி பயிர் கடன் 17 நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் இருக்கும் என்ற முதல்வரின் அறிவிப்பு விவசாயிகளின் வாழ்வில் இருளை ஏற்படுத்தி உள்ளது. எனவே 17 நிபந்தங்களை கைவிட்டு முழு பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவைகளில் கோடிக்கணக்கான மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மிகவும் மோசமாக நடைபெறுகிறது. அதனை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: