சொந்த பண்ணைக்கு தன் துறை மூலமே ரூ.1 கோடி மானியம் பெற்ற ஒன்றிய இணையமைச்சர்

ஜெய்பூர்: பிரதமர் மோடி தலைமையிலான அரசில் ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் பகீரத் சவுத்ரி. இவர் தனது சொந்த அமைச்சகத்தின்கீழுள்ள ஒரு திட்டத்தின் மூலம், ராஜஸ்தானில் உள்ள தனது சொந்த வௌ்ளரிக்காய் பண்ணைக்கு ரூ.99 லட்சம் அரசு மானியம் பெற்றுள்ளதாக செய்திகள் வௌியாகி உள்ளன.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் தன் எக்ஸ் பதிவில், “ஒரு வேளாண் இணையமைச்சர், தனது சொந்த அமைச்சக திட்டத்தின்கீழ் தனது சொந்த பண்ணைக்காக ஏறக்குறைய ரூ.1 கோடி மானியம் பெறுவதை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்? இது மோடி அரசின் ஊழலின் புதிய வடிவம்’ என்றார்.

Related Stories: