முக்கிய அறிவிப்பு : EPFO போர்டல் 3 நாட்களுக்கு இயங்காது…

டெல்லி: மென்பொருள், தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, இன்று (ஜூன் 26) முதல் ஜூன் 28 வரை EPFO போர்டல் மூலமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதற்காக EPFO போர்டல் மூலம் சந்தாதரர்கள் பணம் பெற்று வருகின்றனர். இதனால் EPFO ​​தனது இணையவழிச் சேவைகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் வழங்குவதற்காகக் கணினி அமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, இணையதளச் சேவைகள் 3 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மென்பொருள், தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் காரணமாக இன்று முதல் வருகிற 28-ந்தேதி EPFO போர்டல் மூலமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய PF Claim-கள், முன்பணம், கணக்கு பரிமாற்றம் போன்ற சேவைகளை ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட Claim-கள் ரத்து செய்யப்படாது என்றும், மாற்றுத் தேவைகளுக்கு SMS, Missed Call, ஹெல்ப்லைன் (14470) வாட்ஸ்அப் மூலம் அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: