1975ல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரான நேரடி தாக்குதல் திட்டமா? பிரதமர் மோடி விமர்சனம்

புதுடெல்லி: 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இது 1977 மார்ச் 21 வரை நடைமுறையில் இருந்தது. அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட ஜூன் 25ம் தேதி(நேற்று) நாடு முழுவதும் அரசியலமைப்பு படுகொலை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், “அவசரநிலை பிரகடனம் என்பது நமது அரசியலமைப்புக்கு எதிரான நேரடி தாக்குதல். அக்காலத்தில உரிமைகள் முடக்கப்பட்டு, நமது ஜனநாயகத்தின் அடித்தளமாக திகழும் நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அரசியலமைப்பு விழுமியங்களை பாதுகாப்பதற்கான எங்கள் கூட்டு உறுதிப்பாட்டை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் ” என தெரிவித்துள்ளார்.

Related Stories: