சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிப்பு

சென்னை: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, “போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்” 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 2026-ம் ஆண்டிற்கான பதக்கங்களை கீழ்கண்ட காவல் அதிகாரிகள்/காவல் ஆளிநர்களுக்கு வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்கள்: கடலூர் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், சென்னை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ.லட்சுமணன், சென்னை பெருநகர காவல் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு, காவல் உதவி ஆணையாளர் வை.மனோஜ்குமார்,

திருச்சி மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர், மோ.கண்ணன், கோயமுத்தூர் மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு, காவல் ஆய்வாளர், பொ. காமராஜ், தேனி மாவட்டம் குரங்கனி காவல் நிலையம், காவல் உதவி ஆய்வாளர், மு.அருண், தேனி குமுளி காவல் நிலையம் தலைமைக் காவலர் – 1868, கே.ராஜ்குமார், நாகை வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம், தலைமைக் காவலர் 348, க.கார்த்திகேயன், புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் காவல் நிலையம், தலைமைக் காவலர் – 1288, அ. குத்புதீன்,

திருப்பூர் நல்லூர் காவல் நிலையம், சிறப்பு உதவி ஆய்வாளர் – 973, க.ராமர், நெல்லை மதுவிலக்கு அமலாக்க பிரிவு, தலைமைக் காவலர் -2244, மு. ஐய்யப்பன், சென்னை பெருநகர காவல் R-3 அசோக் நகர் காவல் நிலையம், தலைமைக் காவலர் – 46983, ந. பிரேம் குமார், கரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, சிறப்பு உதவி ஆய்வாளர் -1138, உ.பி. செந்தில்குமார், தேனி அலகு போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு, தலைமைக் காவலர் – 2120,ச. ராமகிருஷ்ணண் ஆகியோருக்கு பதக்கம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Related Stories: