மதுரை: கரூர், மண்மங்கலத்தை சேர்ந்தவர் அசோக்குமார். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி. இவர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த 2023, மே 26ம் தேதி கரூரில் உள்ள எனது அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும்,
தவறான வார்த்தைகளால் திட்டியதாகவும், அவர்களது லேப்டாப் மற்றும் 5 பென் டிரைவ்களை பறித்துச் சென்றதாகவும் கூறி, வருமான வரித்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணகாந்த் அளித்த புகாரின் அடிப்படையில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி தனபால், நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
