“இனி நல்லதே நடக்கும்” – தந்தை ராமதாஸ் உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு இருமுறை அழுத்தி சொன்ன பாமக தலைவர் அன்புமணி

 

விழுப்புரம்: “இனி நல்லதே நடக்கும்” என தந்தை ராமதாஸ் உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு பாமக தலைவர் அன்புமணி பதிலளித்துள்ளார். பாமக சிறப்புப் பொதுக்குழுவில் ராமதாஸ் அன்புமணி இடையே வெடித்த மோதல் தேர்தல் வரை நீடித்தது. இந்நிலையில் ராமதாஸ் – சரஸ்வதியின் 61ஆவது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு குடும்பத்தினருடன் சென்று அன்புமணி சந்தித்தார். மனைவி சவுமியா அன்புமணி மற்றும் மகள்களுடன் சென்று ராமதாஸை அன்புமணி சந்தித்தார்.

தைலாபுரம் இல்லத்துக்கு வந்த பாமக தலைவர் அன்புமணியை ராமதாஸ் ஆரத்தழுவி கண்ணீருடன் வரவேற்றார். இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி அழுது பாசத்தை பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் பல மாதங்களுக்கு பிறகு முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி; “தந்தை, தாயை குடும்பத்தோடு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்; இனி எல்லாம் நல்லதே நடக்கும்” என்று கூறினார்.

“பாமக வலுவடையும்”
இது குறித்து பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி பேசுகையில்; “ராமதாஸ்- அன்புமணி சந்திப்பு நல்ல அறிகுறிதான்; இருவரின் சந்திப்பால் பாமக வலுவடையும்; ராமதாஸ் – அன்புமணி ஒன்றாக சந்தித்துக் கொண்டது வரவேற்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: