கோவையில் அழுகிய நிலையில் நிர்வாணமாக இளம்பெண் சடலம் கண்டெடுப்பு..!!

கோவை: கோவை குனியமுத்தூர் அருகே காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை புதூர் சி.பி.எம். கல்லூரிக்கு அருகேயுள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில், சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து குனியமுத்தூர் போலீசார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி சந்தேகத்திற்கு இடமான நபர்களின் நடமாட்டம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சூலூரில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்த சம்பவத்திலிருந்து மக்கள் மீள்வதற்குள் கோவையில் மீண்டும் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: