சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நாளை முதலமைச்சர் கலந்துகொள்ளும் மின்சார வாரியம் தொடர்பான நிகழ்ச்சியில் மின்தடை ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உதவி செயற்பொறியாளருக்கு மக்கள் தொடர்பு அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது; “சென்னை கலைவாணர் அரங்கத்தில் 24.06.2026(இன்று) காலை 10:00 மணியளவில் “தமிழ்நாடு மின்சார வாரியம்” சார்பாக “379 உதவி பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா” தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் மீன் நடை ஏதும் ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்ள ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
