கிணத்துக்கடவு : நெகமம் அருகே கஞ்சா விற்ற வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்து 6 கிலோவை பறிமுதல் செய்தனர்.நெகமம் அருகே உள்ள காட்டம்பட்டி கள்ளிமடை பிரிவு பகுதியில் வடமாநில தொழிலாளி ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக நெகமம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் கண்டதும் தப்பியோட முயன்ற நபரை மடக்கி பிடித்துனர்.
விசாரணையில், ஒடீசா மாநிலத்தை சுதாகர்(32), என்பதும், காட்டம்பட்டி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து கொண்டு, வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
