இங்கிலாந்து தொடரில் ஜெய்ஸ்வால் நீக்கம் விராத் கோஹ்லி, பும்ரா, அக்சர் சேர்ப்பு

புதுடெல்லி: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆப்கானிஸ்தான் அணியுடன் நடந்த போட்டியில் சதம் விளாசிய தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதே சமயம், அனுபவ வீரர்கள் விராத் கோஹ்லி, ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

கோஹ்லி உடல்தகுதியை நிருபித்தால் மட்டுமே இந்த தொடரில் பங்கேற்க முடியும் என தேர்வுக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்படவில்லை.
இங்கிலாந்து அணியுடனான 3 ஒருநாள் போட்டிகள் பர்மிங்காம் (ஜூலை 14), கார்டிப் (ஜூலை 16), லார்ட்ஸ் (ஜூலை 19) மைதானங்களில் நடைபெற உள்ளன.

இந்தியா: கில் (கேப்டன்), ரோகித், கோஹ்லி, ஷ்ரேயாஸ், கே.எல்.ராகுல், இஷான், வாஷிங்டன், அக்சர், நிதிஷ் குமார், குல்தீப், பும்ரா, பிரசித், ஹர்ஷித், அர்ஷ்தீப், குர்னூர்.

Related Stories: