கோட்டைக்கு மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை தடுத்து நிறுத்தி துன்புறுத்துவதா..? திமுக மாற்றுத்திறனாளிகள் அணி தலைவர் கண்டனம்

சென்னை: திமுக மாற்றுத்திறனாளிகள் அணி மாநில தலைவரும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவருமான ரெ.தங்கம் அறிக்கை:
தலைமை செயலகத்திற்கு தினந்தோறும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, துறை சார்ந்த அமைச்சரிடமும், அதிகாரிகளிடமும் மனு அளிக்க மாற்றுத்திறனாளிகள் வருகிறார்கள். இவர்கள் காவல்துறையால் தலைமை செயலகத்திற்குள் விடாமல் தடுக்கப்படுகின்றனர். முதல்வர் விஜய், மாற்றுத்திறனாளிகள் எவ்வித கட்டுப்பாடு இன்றி கோட்டைக்கு சென்று துறை சார்ந்த அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் மனு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்புகளை இலவசமாக வழங்க வேண்டும். தாங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்த மாதாந்திர உதவித் தொகை ரூ.2500 வழங்க வேண்டும்.

Related Stories: