“மவுன புரட்சி”-ஆக மாறிய விசில் புரட்சி – எங்க முதல்வருக்கு பதிலா நாங்க தான் பேசுவோம்.. வாயாக செயல்படும் அமைச்சர்கள்

சென்னை: சட்டமன்றத்தில் திமுக – தவெக உறுப்பினர்கள் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்ற சம்பவங்கள் மிகவும் அதிகரித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீவிரமாக உள்ளது.

ஆனால் இவை எதற்கும் வாய் திறந்து பதில் சொல்லாமல், என்ன நடந்தாலும் நான் வாய் திறக்கமாட்டேன் என  மவுன புரட்சி செய்து வருபவர் முதல்வர் விஜய், என திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் விமர்சித்தார்.  தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ; ஆனால் முதல்வர் விஜய் இது குறித்தெல்லாம் வாய் திறந்து பேசுவதே இல்லை. இது தான் தவெக கொண்டு வந்துள்ள மாற்றமா என மக்கள் கேட்கிறார்கள்.

தவெக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான இலவச மின்சார அறிவிப்பில் தமிழக அரசு மக்களை ஏமாற்றி உள்ளது என்றும் ஆஸ்டின் குற்றம்சாட்டி உள்ளார். அதே போல காலையில் காக்கி சீருடையில் செல்லும் காவலர்களே, மாலையில் சிங்கப்பெண் சீருடையில் செல்கிறார்கள்.

அதாவது ஒரு ஷிப்ட் காக்கி உடையிலும், ஒரு ஷிப்ட் சிங்கப்பெண் சீருடையிலும் பணிக்கு செல்கிறர்கள் என திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு உள்ளது. இந்நிலையில் ஆயுதப்படையில் உள்ளவர்களை தான் சிங்கப்பெண் படையில் பணியில் அமர்த்தி இருக்கிறது ஆளும் தவெக அரசு. மாநிலத்தில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு நிலையை பார்த்தால் தமிழகம் அமைதியான மாநிலம் என்ற நிலை மாறி, பாதுகாப்பு இல்லாத மாநிலம் ஆகிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது என்றார்.

இதனிடையே சட்டம் ஒழுங்கு தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு வழக்கம் போல மவுனமாகவே இருந்துள்ளார் உள்துறையை நிர்வகிக்கும் முதல்வர். முதல்வரை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதே போல எங்க தலைவருக்கு என்ன பேச வேண்டும், எப்போது பேச வேண்டும் என தெரியும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவும் பேசி இருக்கிறார். ஆகி மொத்தம் தமிழக முதல்வர் விசில் புரட்சி செய்து ஆட்சியை பிடித்து விட்டதாக தவெக-வினர் பெருமை பேசி கொண்டாலும், சட்டப்பேரவையில் மவுன குருவாக காட்சியளிப்பதை பார்த்து மக்கள் எள்ளி நகையாடி வருகின்றனர்.

Related Stories: