கோவாவிற்கு வந்த சோதனை – மழை பெய்யலனா அவ்ளோதான்.! வேகமாக காலியாகும் குடிநீர் இருப்பு..

பனாஜி: தாமதமாகி வரும் பருவமழை மற்றும் கோடை வெயில் காரணமாக கோவாவில் உள்ள முக்கிய நீர்நிலைகளின் நீர்மட்டம் மிக வேகமாக சரிந்து வருகிறது. இந்நிலையில் ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் அடுத்த 1 மாதத்திற்கு தேவையான குடிநீர் மட்டுமே இருப்பு உள்ளதாக கோவா அரசு கூறி இருக்கிறது.தெற்கு கோவா மற்றும் வடக்கு கோவாவின் சில பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணையான செலாலிம் அணை, தற்போது வெறும் 27% மட்டுமே நிரம்பியுள்ளது.

வடக்கு கோவாவின் சத்தாரி பகுதியில் உள்ள அஞ்சுனெம் அணையின் நீர்மட்டம் மிக மோசமாக 9.9%-ஆக குறைந்துள்ளது. அதே போல மற்றொரு முக்கிய அணையான மைசால் அணையில், நீர்மட்டம் தற்போது 19% மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் மக்கள் இதனால் பதற்றமடையத் தேவையில்லை என்று கூறியுள்ள மாநில நீர் வழங்கல் துறை அமைச்சர் சுபாஷ் ஃபால் தேசாய், நீர் வீணாவதைத் தடுக்க அரசு கடுமையான அறிவுறுத்தல்களை வெளியிடும் என்று தெரிவித்தார்.

குடிநீர் வீணாவதைத் தடுக்க தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கடுமையான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படவுள்ளதாக கூறினார். பருவமழை மேலும் தாமதமானால், பிசுர்லெம் சுரங்கக் குழிகளில் இருந்து தண்ணீரை எடுத்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்ப மற்றும் திலாரி கால்வாய் நீரைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசாய் கூறியுள்ளார். இதனிடைய அடுத்த வார இறுதிக்குள் கோவாவில் பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளதால், கோவாவின் முக்கிய நீர்நிலைகள் அப்போது நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related Stories: