தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெலட்டூர், கோவிந்தநல்லூர் உள்ளிட்ட ஊர்களில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
