தாய்லாந்திலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 12 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்

சென்னை: தாய்லாந்து நாட்​டில் இருந்து சிங்​கப்​பூர் வழி​யாக, சென்​னைக்கு விமானத்​தில் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்​சாவை கடத்தி வந்த கேரள இளைஞர்​கள் இரு​வரை, விமான நிலைய சுங்​கத்​துறை அதி​காரி​கள் கைது செய்​தனர்.

தாய்​லாந்து நாட்​டிலிருந்து போதைப் பொருட்​களை, சென்​னைக்கு விமானத்​தில் கடத்தி கொண்டு வரு​வ​தாக, சென்னை விமான நிலைய சுங்​கத்​துறை அதி​காரி​களுக்கு ரகசிய தகவல்​கள் கிடைத்​தன. இதையடுத்​து, சென்னை சர்​வ​தேச விமான நிலை​யத்​தில், சுங்​கத்​துறை ஏர் இன்​டெலிஜென்ஸ் அதி​காரி​கள் நேற்று தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டிருந்​தனர்.

இந்​நிலை​யில், தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்​காக்​கில் இருந்து சிங்​கப்​பூர் வழி​யாக, சென்​னைக்கு தனி​யார் பயணி​கள் விமானம் ஒன்று வந்​தது. அந்த விமானத்​தில் வந்த பயணி​களை சுங்க அதி​காரி​கள் கண்​காணித்தனர். அப்​போது, கேரள மாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்​கள் சுற்​றுலா பயணி​களாக தாய்​லாந்து நாட்டுக்கு சென்​று​விட்​டு, மறு​நாளே தாய்​லாந்​தில் இருந்து சிங்​கப்​பூர் வழி​யாக சென்​னைக்கு திரும்​பியது சந்தேகத்தை ஏற்​படுத்​தி​யது.

​அவர்​களை விசா​ரித்த போது முன்​னுக்கு பின் முரணாக பதிலளித்​த​தால், அவர்​களை தனியறைக்கு அழைத்​துச் சென்​று, அவர்​களது உடமை​களை சோதித்​தனர். அதில் உணவுப் பொருட்​களுக்கு இடையே ரகசி​ய​மாக மறைத்து வைக்​கப்​பட்​டிருந்த 12 கிலோ பதப்​படுத்​தப்​பட்ட உயர்ரக ‘ஹைட்​ரோ​போனிக்’ கஞ்சா இருப்​பது கண்டறியப்பட்டது. இதன் சர்​வ​தேச சந்தை மதிப்பு ரூ.11 கோடி​யாகும்.

இதனை தொடர்ந்​து, இரு​வரை​யும் அதி​காரி​கள் கைது செய்​தனர். கைது செய்​யப்​பட்ட இரு​வரும் சர்​வ​தேச போதை கடத்​தும் கும்​பலுக்கு கடத்​தல் குருவி​களாக செயல்​பட்​ட​வர்​கள் என தெரிய வந்​தது. இவர்​களிடம் இந்த போதை பொருளை வாங்க இருந்த கடத்​தல் கும்​பலை சேர்ந்​தவர்​கள் யார்? என சுங்க அதி​காரி​கள் தீவிரமாக விசா​ரித்து வரு​கின்​றனர்.

Related Stories: