தமிழக சட்டசபையில் குதிரை பேரம் நடந்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தின் போது குதிரை பேரம் நடந்ததாக கூறி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதை பொதுநல வழக்காக விசாரணை செய்யமுடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த குதிரை பேர விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் குதிரை பேரம் என்பது நடத்தப்பட்டிருக்கிறது என்றும் பெருபான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில் ஆளும் தமிழக வெற்றி கழகம் இந்த குதிரை பேரம் ஈடுபட்டு பெருபான்மையை நிரூபித்திருக்கிறார்கள்.

எதிர்க்கட்சியில் இருக்கக்கூடியவர்கள் கூட ஆளும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இதில் நிறைய முறைகேடு நடந்திருக்கிறது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். அரசுக்கு எதிரான இந்த வழக்கு, சுப்ரீம்கோர்ட்டில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி வி.மோகனா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

ஆனால் இந்த வழக்கானது பொதுநல வழக்காக Article 32 கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், குதிரை பேர விவகாரம் தொடர்பான மனுவை பொது நல வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் தெரிவித்தனர். பிறகு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Related Stories: