சண்டிகர்: பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மர்தான் நகரின் பாபு மொஹல்லா பகுதியில் குருத்வாரா ஒன்றில், பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சீக்கிய தம்பதியினரை நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் குருத்வாராவிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டுக்கொன்றனர்.
இந்த கொலைகளை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட சீக்கியர்களின் தலைமை பீடத்தின் ஐதேதார் கார்கஜ், சிறுபான்மை சமூகங்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை உறுதி செய்வது பாகிஸ்தான் அரசின் பொறுப்பாகும் ” என்றார். இதுதொடர்பாக பா.ஜவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
