விடுதியில் தங்கியிருந்தபோது கணவருடன் மது அருந்திய ஐடி பெண் திடீர் சாவு

 

திருமலை: கணவருடன் சேர்ந்து மது குடித்த ஐடி பெண் ஊழியர் இறந்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ராதாகாயத்ரி(27). இவருக்கும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீசரண்(29) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. ராதாகாயத்ரி குருகிராமில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஸ்ரீசரண் புனேவில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த இவர்கள் சுற்றுலா தலங்களை பார்க்க வடமாநிலங்களுக்கு புறப்பட்டனர். கடந்த 13ம்தேதி உத்தரகண்ட மாநிலம் முசோரி நகர் திப்ரிதரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியபோது இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

மறுநாள் காலை ஸ்ரீசரண் எழுந்து பார்த்தபோது ராதாகாயத்ரி மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் கிடந்துள்ளார். அவரை எழுப்பியபோது இறந்துவிட்டது தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் வந்து விசாரித்துள்ளனர். இதன்பிறகு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக டேராடூனில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து மது குடித்ததால் இறந்தாரா? வேறு ஏதாவது காரணமா என விசாரித்து வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: