நீட் மறுதேர்வுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: கடந்த மாதம் நடைபெற்ற நீட் நுழைவு தேர்வில் வினாத்தாள் கசிந்ததால் மறுதேர்வு வரும் 21ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்நிலையில் தேசிய தேர்வு முகமையின் நீட் மறுதேர்வு என்ற முடிவுக்கு தடை விதிக்க கோரியும், இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீர் மறுதேர்வு நடத்தப்படுவதை நிறுத்தி வைக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏற்கனவே நீட் விவகாரம் தொடர்பான பல்வேறு வழக்குகளை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ் நரசிம்மா அமர்வில் இவ்வழக்கையும் பட்டியலிடுமாறு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பரிந்துரைத்ததோடு, கோடை விடுமுறைக்கு பிறகு உச்ச நீதிமன்றம் தனது வழக்கமான செயல்பாடுகளை ஜூலை 13ம் தேதி தொடங்கிய பிறகு இந்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ஜூன் 21ம் தேதிய நடைபெற இருக்கும் நீட் மறுதேர்வுக்கு எந்தவித தடையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Related Stories: