செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் அரசு மதுபான கடை உள்ளது. இங்கு செங்கம் டவுன் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சங்கர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு புதுப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் செந்தில்குமார் தனது சொந்த ஊரான குப்பநத்தம் பகுதியில் திருவிழா நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள நண்பர்களுக்கு டிரீட் வைப்பதற்காக மது பாட்டில்கள் வாங்க டாஸ்மாக் கடைக்குச் சென்றார். அங்கு விற்பனையாளர் சங்கரிடம் கடனாக மதுபாட்டில் கேட்டுள்ளார். பணம் தராமல் மது பாட்டில் தர முடியாது என விற்பனையாளர் சங்கர் கறாராக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் செந்தில்குமார் கடைக்குள் புகுந்து விற்பனையாளர் சங்கரை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது தடுக்க சென்ற அதேபகுதியை சேர்ந்த இளைஞர்களையும் தாக்கினாராம். இதுதொடர்பாக செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
டாஸ்மாக்கில் கடனாக சரக்கு கேட்ட போலீஸ் தர மறுத்தவருக்கு அடிஉதை
- டாஸ்மாக்
- செங்கம்
- குப்பநாதம் கிராமம்
- திருவண்ணாமலை மாவட்டம்
- ஷங்கர்
- திருவள்ளுவர் நகர்
- செங்கம் டவுன்
- செந்தில்குமார்
- புதுப்பாளையம் காவல் நிலையம்…
