நெல்லை: நெல்லையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பெருமாள் மீது வழக்கு பதிவுசெய்தனர். சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பெருமாள் என்ற இளைஞர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவான இளைஞர் பெருமாளுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகிறது. நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குள் 2 வாரங்களில் 4 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளது.
