80 வயது மூதாட்டி பலாத்காரம்: 25 வயது போதை வாலிபர் கைது

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 25 வயது போதை வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவர் நேற்று முன்தினம் விவசாய நிலத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்குள்ள புளியமரத்தடியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 25 வயது வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அவர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் அவரின் வாயை பொத்தி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து வாலிபர் தப்பியோடினார். இதில் பாதிக்கப்பட்ட மூதாட்டி உறவினர்களிடம் கூறி கதறினார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ​இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காமராஜ் நகரை சேர்ந்த ரவி மகன் சஞ்சய் (25) என்பவரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மதுபோதையில் மூதாட்டியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஊத்தங்கரை நீதிபதி முன்பு சஞ்சயை ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Related Stories: