பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு : குழந்தைகள் நல குழு உறுப்பினர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 2 பெண் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு கடலூர் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு கடந்த 3ம் தேதி சென்றார். அந்த பெண்ணின் மூத்த குழந்தை மேற்கண்ட மையத்தில் சேர்க்கப்பட்டார். அவரது தங்கையை சேர்க்க முடியவில்லை.

இந்நிலையில் கடலூர் குழந்தைகள் நல மையத்தில் பணிபுரியும் சமயவேலு(49) என்பவர், அந்த பெண்ணிடம் அவரது மகளை சேர்க்க உதவி செய்வதாக கூறியுள்ளார். கடந்த 5ம் தேதி செம்மண்டலம் பழைய வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அருகில் சமயவேல் தங்கியிருக்கும் இடத்திற்கு அந்தப் பெண்ணை அழைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர், கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்படி கடலூர் அனைத்து மகளிர் போலீசார் சமயவேல் மீது வழக்கு பதிந்துநெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் நல குழு உறுப்பினர் சமயவேலை கைது செய்தனர்.

Related Stories: