சில்லிபாயிண்ட்…

* இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி லார்ட்சில் நேற்று தொடங்கியது. லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் 150வது டெஸ்ட் போட்டி இதுவாகும். உலகில் அதிக டெஸ் போட்டிகள் நடந்த மைதானமும் இதுதான். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 39.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ஜெமிக்சன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

* பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என்று சமனில் உள்ள நிலையில், 3வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 42 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

* இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 டி.20 போட்டி, 2 டெஸ்ட்டில் ஆடுகிறது. முதல் ஒருநாள் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 303 ரன் குவித்தது. பதும் நிசங்கா 79, கேப்டன் குசால் மெண்டிஸ் 72 ரன் அடித்தனர். அடுத்த ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 262 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 41 ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

Related Stories: