டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுடன் முதல்முறையாக மோதும் ஆப்கானிஸ்தான்: நாளை தொடக்கம்

நியூசண்டிகர்: இந்தியா வந்து உள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. டெஸ்ட் போட்டி நியூசண்டிகரில் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம்: சுப்மன் கில் (கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், பட்டிகல், நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மனவ் சுதர், கர்னூர் பிரார், ஹர்ஷ் துபே, துருவ் ஜூரேல்.

ஆப்கானிஸ்தான் அணி விவரம்: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அப்துல் மாலிக், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஹ்மானுல்லா ஜத்ரான், அப்சர் ஜசாய், இக்ராம் அலிகில் , அஸ்மத்துல்லா உமர்சாய், ஷரபுதீன் அஷ்ரஃப், நங்யால் ஷரபி, குய்ல் கரோதாய் சலீம் சபி.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 2018ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானது. 8 ஆண்டுகளில் முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் அணி எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிக்கு தயாராவதற்காக இந்திய அணி வீரர்கள் நேற்று முன்தினம் பயிற்சியை தொடங்கினர்.

* ஒருநாள் தொடர்: கோஹ்லி விலகல்
டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் ஜூன் 13, 17, 20 ஆகிய நாட்களில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணி விளையாட உள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில், சுப்மன் கில் ( கேப்டன்), ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், கர்னூர் பிரார், ஹர்ஷ் துபே ஆகியோர் இடம்பெறுள்ளனர்.

இதில் ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோ உடல்தகுதியை நிரூபிக்க பெங்களூரு சிறப்பு மையத்துக்கு வர பிசிசிஐ அழைப்பு விடுத்து உள்ளது. இந்நிலையில், காயம் காரணமாக ஒருநாள் போட்டி தொடரில் இருந்து விராட் கோஹ்லி விலகி உள்ளார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.

Related Stories: