தெலங்கானா தேர்தலில் ஜனசேனா போட்டியிடும்: ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அறிவிப்பு

திருமலை: வரும் தேர்தலில் ஜனசேனா கட்சி தெலங்கானாவில் போட்டியிடும் என்று ஆந்திர மாநில துணைமுதல்வர் பவன்கல்யாண் அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தெலங்கானாவிற்கு ஏதேனும் துரோகம் நடந்தால், ஜனசேனா கட்சிதான் முதலில் குரல் எழுப்பும்.

நான் செய்வது எதுவும் வாக்குகளுக்காக அல்ல. வரும் தேர்தலில் ஜனசேனா கட்சி தெலங்கானாவில் போட்டியிடுவோம். பிராந்தியவாதம் கொண்டுவரப்பட்டால் நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும். பயங்கரவாதத்தை விட பிராந்தியவாதம் அதிக தீங்கு விளைவிக்கும். ராகுலும் பிரியங்காவும் தெற்கில் எங்கேனும் போட்டியிட முடியுமா? இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: