சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுக்கான மறுமதிப்பீடு தாமதம் – மாணவர்கள் அவதி

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுக்கான மறுமதிப்பீடு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அங்கிதா எனும் மாணவி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த நிலையில் அவருடைய விடைத்தாள் இரண்டு பக்கங்கள் காணாமல் போன விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முயன்றபோது இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். CBSE இணையதளம் பராமரிப்பில் உள்ளதாக காட்டப்பட்டது.

இதேபோல் மே 19ல் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது இணையதளத்தில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டன. மேலும் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. போதுமான தொழில்நுட்ப வசதிகளை உருவாக்காத CBSE மீது பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: