×

போதிய பஸ்களை இயக்காததால் விடிய, விடிய காத்திருப்பு மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் போராட்டம்

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கும், அண்டை மாநிலங்களின் பெங்களூரு, திருப்பதி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூர், மதுரை திருப்பரங்குன்றம் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் தரிசனம் செய்வதற்காக மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் தென்மாவட்டங்களுக்கு அதிகளவில் வருகை தந்தனர்.

இவர்கள் அனைவரும் தரிசனம் முடித்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கி சொந்த ஊர் செல்ல மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் குவிந்தனர். ஆனால், விடியும் வரை காத்திருந்தும் சென்னை, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை.

இதனால், இரவு முழுவதும் பஸ்நிலையத்தில் குழந்தைகள், பெரியவர்கள், குடும்பத்தினர், உடைமைகளுடன் பல மணி நேரம் காத்திருந்தனர். பொறுத்துப் பார்த்த பயணிகள் நேற்று அதிகாலை 5.40 மணியளவில் திடீரென பஸ் நிலைய நுழைவாயில் அருகே திரண்டு, பஸ்கள் விடக்கோரி கோஷங்கள் எழுப்பினர். மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

Tags : Mattuthavani ,Madurai ,Chennai ,Trichy ,Thanjavur ,Perambalur ,Ariyalur ,Bangalore ,Tirupati ,Thiruvananthapuram ,Vaikasi Visakhapatnam ,Tiruchendur ,Madurai Thiruparankundram… ,
× RELATED தமிழகம் முழுவதும் 68 சுங்கச்சாவடிகளில்...