- அமைச்சர்
- புஸ்ஸி ஆனந்த்
- திருச்சி
- முதல் அமைச்சர்
- விஜய்
- ஜோசப் கல்லூரி மைதானம்
- சட்டிரம் பேருந்து நிலையம்
திருச்சி: முதல்வர் விஜய் இன்று திருச்சி வருகிறார். சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஜோசப் கல்லூரி மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தார்.
அப்போது தமிழ்நாட்டில் நிகழும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்தும், காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதியில் யார் போட்டியிட போகிறார் என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் கூறாமல் நழுவி சென்றார். முதல்வர் நிகழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பியபோது, உங்களுக்கு அனைத்தையும் தெரிவிக்கிறோம் என்று மட்டும் கூறிவிட்டு காரில் புறப்பட்டு சென்றார்.
