- Tasmak
- வார் முடிவு
- தெவ்கவக்
- திருப்பரங்குந்தரம்
- மதுரை
- தவேகா எம். ஏ
- நிர்மல் குமார்
- மின்சாரம் மற்றும் சட்ட அமைச்சர்
- திருப்பரங்குந்தரம்
திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் தொகுதி தவெக எம்எல்ஏ நிர்மல்குமார், மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் பகுதியில் பெண்கள் பள்ளி, கோயில் மற்றும் மருத்துவமனை அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பொதுமக்கள் தரப்பில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதன் எதிரொலியாக, திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் இருந்த 3 கடைகளில் 2 மட்டும் மூடப்பட்டன.
மற்றொன்று செயல்பாட்டில் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் விளாச்சேரி பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் நிர்மல்குமார், ‘திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு விட்டது’ என கூறினார். ஆனால் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் டாஸ்மாக் கடை, தற்போது வரை செயல்பட்டு வருகிறது.
இந்த டாஸ்மாக் பாரின் உரிமையாளர், அதிமுகவில் இருந்து சமீபத்தில் தவெகவிற்கு தாவியவர் என்பதால், இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என, சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வருகிறது. தனது தொகுதியில் டாஸ்மாக் செயல்பாட்டில் இருக்கிறதா, இல்லையா என்பது கூடத்தெரியாமல், அமைச்சர் பொய்யான தகவலை கூறுவதாகவும் இப்பகுதி மக்கள் வெளியிட்டுள்ள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, அந்த டாஸ்மாக கடை மூடப்படுமா அல்லது தவெகவிற்கு சென்றவரின் பார் இருப்பதால் தொடர்ந்து செயல்படுமா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
