திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகம் – பெண்கள், சிறுமிகள் மயக்கம்!

 

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகம் – நீண்ட நேரம் வரிசையில் நின்ற பெண்கள், குழந்தைகள் மயக்கம்! கொளுத்தும் வெயிலில் குடிக்க தண்ணீர் இன்றி வரிசையில் நின்றவர்கள் சிலர் மயங்கி விழுந்தனர். திருப்பரங்குன்றம் கோவிலில் மயங்கி விழுந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

16ஆம் கால் மண்டபத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதை தடுப்பு கம்பிகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்லும் பாதை இருபுறமாக அடைத்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் இந்த ஆண்டு கூட்ட நெரிசல் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சன்னதி தெரு பகுதிகளில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.

 

Related Stories: