பொது இடத்தில் குப்பை கொட்டிய பனியன் நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

திருப்பூர், மே 28: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் குப்பைகள் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது.

அதன் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர்கள் கோகுலநாதன், கீர்த்திகா, அருண்பாண்டி, ஜானகிராமன், கீர்த்தனா கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது குமார்நகர் சிக்னல் பகுதியில் குப்பைகள் கொட்டிய தனியார் பனியன் நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரமும், காவிளிபாளையத்தில் அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்த நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதித்தனா்.

 

Related Stories: