சென்னை: தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி ) மாநில நிர்வாகிகள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சந்தித்து பணியாளர்கள் பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என முறையிட்டோம். நேற்று சென்னையில் டாஸ்மாக் நிறுவனத்தில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அமைச்சரின் வேண்டுகோளை பரிசீலித்து தொழிற்சங்கத் தலைவர்களை பேசி தீர்வு காண வாருங்கள் என மேலாண்மை இயக்குநர் அலுவலகம் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடந்தது.
ஏஐடியூசி-ஐ பொறுத்தவரை பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட நிர்வாகிகள் கலந்து பேசி, அமைச்சரின் வேண்டுகோளை ஏற்பது அமைச்சர் கேட்டுக் கொண்ட கால அவகாசம் வரை பணி புரிந்து வருவது என தீர்மானித்து, கூட்டத்திலும் தெரிவிக்கப்பட்டது. வரும் ஜூன் 6ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநில செயற்குழுக் கூட்டத்தில் புதிய நிலை குறித்து விவாதித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. சங்க உறுப்பினர்களும், பணியாளர்களும் இன்று முதல் வழக்கம் போல பணிகளில் ஈடுபட வேண்டும்.
