- பாக்கிஸ்தான்
- எங்களுக்கு
- ஈரான்
- தாதாளடி
- வாஷிங்டன்
- எங்களுக்கு
- செனட்டர்
- லிண்ட்சே கிரஹாம்
- ஐக்கிய மாநிலங்கள்
- இஸ்ரேல்
வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான சமாதான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்படுவதில் உள்ள நம்பகத்தன்மை குறித்து அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டில் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவின் முயற்சியால் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆபிரகாம் உடன்படிக்கை’ கையெழுத்திடப்பட்டது.
இந்நிலையில், ஈரான் உடனான சமாதான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகள் இந்த உடன்படிக்கையில் இணைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வலியுறுத்தியிருந்தார். ஆனால், பாகிஸ்தானின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் இஸ்ரேலுடனான எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஆதரிக்க முடியாது என்று கூறி டிரம்ப் கொடுத்த அழுத்தத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் முற்றிலுமாக நிராகரித்தார். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், இஸ்ரேல் மீதான பாகிஸ்தானின் நீண்டகால விரோதப் போக்கை சுட்டிக்காட்டி அதன் நடுநிலைமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மத்தியஸ்தராக இருப்பது பெரும் பிரச்னையாக மாறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை; அவர்களின் விமான நிலையங்களில் ஈரானின் ராணுவ விமானங்கள் நிறுத்தப்பட்டிருப்பதுடன், இஸ்ரேலுக்கு எதிராக பாகிஸ்தான் தலைவர்கள் பேசும் கருத்துகள் கவலையளிக்கிறது’ என்று கூறியுள்ளார். மேலும், ஆபிரகாம் உடன்படிக்கையில் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன என்பதை அந்நாடு உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
