சென்னை: விசிகவிலிருந்து அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகினார். ‘விசிகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து முழுமையாக விலகுகிறேன். இதுவரை கட்டிக் காத்த கொள்கை, கருத்தியலில் இருந்து திருமா தடம் மாற தயாராகிவிட்டார். அபாயகரமான திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோமோ என அஞ்சுகிறேன். அவநம்பிக்கையுடன் செயல்படும் திருமாவளவன் தலைமையின் கீழ் இனி பயணிக்க முடியாது’ என பனையூர் பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
